Tuesday, April 22, 2014

இயற்கையில் மறைதலில் ....


அவமதிக்கும் சொற்களில் கோடைச் சூரியன்
என் நல்லிதயத்தை கொளுத்தும்
அவ்வேளை கானல்நீரில் சாம்பலாய் விரவும்
வாஞ்சை மிக்க குருதித்துளிகள்

அடிபட்ட சுருண்ட பாம்பைப்போன்ற தலையினை
விழிகள் கொட்டும் கடலில் அமிழ்த்தினேன்
இரவை மென் ஒளியில் புணர்ந்த நிலவில்
என் உப்புப் படிய கரிக்கும் வாசனை காற்றில்

நிலத்தில் நஞ்சில் விளைந்த மரங்கள்
என் பறவைகள் விஷக்கனி உண்டு சாகும்
மரிக்கும் சந்தர்ப்பங்கள் கிட்டியபோதும்
திறவா இரும்புக்கதவினுள் வாழும் பாதைகள்

வானவில் பரிதி மலர் நிலவு கடல் காற்று
மழை மரம் மலை என பூமி எத்தனை வசீகரம்
அனுபவிக்க இருகண் போதாதபோது பீய்ச்சும்
வலிகள் குருட்டைப் போர்த்தும்

வெறுமையாய்ப் போதல் அநர்த்தங்களுள் மடிதல்
சஞ்சலமாய் ஆன மனதில் சாதல்தான் தவிர
புன்னகைக்கும் உதடுகள் மகிழும் இதயம்
அணைக்கும் இயற்கையில் மறைதலில்.Iyyappa Madhavan

No comments:

Post a Comment