Sunday, April 20, 2014

அரக்கன் புரக்கிரேட்டஸ்

கிரேக்க புராணத்தில் வரும் அரக்கன் புரக்கிரேட்டஸ் , விருந்தினரை அற்புதமான முறையில் உபசரிப்பான். இரவு விருந்தினரை ஒரு ஸ்பெஷல் கட்டிலில் படுக்கவைப்பான். விருந்தினர் கட்டிலை விட நீளம் அதிகமிருந்தால் , கால் அல்லது தலையை வெட்டி கட்டிலின் நீளத்திற்கு மாற்றுவான்., கட்டிலைவிட நீளம் குறைவாக இருந்தால் அவரை இழுத்து நீட்டி கட்டிலின் நீளத்திற்கு சம்மாக்குவான்.
நமக்குள்ளும் புரக்கிரேட்டஸ் ஒழிந்துகொண்டிருக்கிறன்.
அரசியலில் மாற்றுக்கருத்து கூறுபவர்களை , தூற்றுவது, நார்நாராக கிழித்து , ஆபாசமாக பேசுவது வியப்பாக உள்ளது.( தமிழில் பாலியல் கலைக்களஞ்சியம் தயார் செய்துவிடலாம் .)
பல்வேறு முகங்கள் கொண்டதுதான் ஜனநாயகம்,. நாம் இன்னும் ஜனநாயகத்தின் பொருளை உணரவில்லை என தோன்றுகிறது .
உண்மையில் , ஏராளமான கோணங்கள் , வேறுபட்ட பார்வைகள் மூலம் அரசியலின் நல்ல, /கோரமான ,/ சந்தர்ப்பவாத முகங்களை பார்க்க முடிகிறது.கற்றுக்கொள்ள முடிகறது.
ஆரோக்கியமான விவாதம் அரசியலையும் செழுமைப்படுத்தும், தமிழ் மொழியும் வளரும் . thanks DrKamaraj Kamaraj

No comments:

Post a Comment