Monday, April 21, 2014

இலங்கையில் தற்கொலை செய்துகொள்வோரில் 80 வீதமானோர் ஆண்கள்: குடும்ப பிரச்சினைகளே காரணம்

இலங்கையில் தற்கொலை செய்துகொள்வோரில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக பொலிஸார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள தகவல்களின் பிரகாரம் கடந்த இரு வருடங்களில் இலங்கையில் நிகழ்ந்த 6ஆயிரத்து 987 தற்கொலை சம்பவங்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் திணைக்கள தகவல்களின் பிரகாரம் கடந்த 2012ஆம் ஆண்டு 3526 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 810 சம்பவங்களில் பெண்களும் மிகுதி 2ஆயிரத்து 716 சம்பவங்களும் ஆண்களுடன் தொடர்பானவை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் தகவல்களின் படி கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 461 தற்கொலைகள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இதில் 760 சம்பவங்களில் பெண்களும் மிகுதி 2 ஆயிரத்து 701 சம்பவங்களில் ஆண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த தற்கொலைகளுக்கு குடும்ப பிரச்சினை மற்றும் கொடிய நோய்கள் ஆகியனவே பிரதான காரணங்கள் என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment