Tuesday, April 15, 2014

காற்றில் மாசு: பலி 70 லட்சம் பேர்!

காற்று மாசு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 70 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், இதில் 60 லட்சம் பேர் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்ற ‘பகீர்’ தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
உலக அளவில் நிகழும் 8-ல் ஒரு மரணத்துக்கும் காற்று மாசுக்கும் தொடர்பு உண்டு என்கிறது இந்த ஆய்வு. உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் டாக்டர் மரியா கூறுகையில், “காற்று மாசால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளன. உலக அளவில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றலாம்” என்றார். காற்று மாசு காரணமாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு 40 சதவிகிதம் பேரும், சுவாசக் குழாய் பிரச்னை காரணமாக 11 சதவிகிதம் பேரும், நுரையீரல் புற்றுநோய் காரணமாக ஆறு சதவிகிதம் பேரும் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
Photo: காற்றில் மாசு: பலி 70 லட்சம் பேர்! 

No comments:

Post a Comment