படம் : மன்னாதி மன்னன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : TMS , M L வசந்தகுமாரி
ஆடாத மனமும் உண்டோ
Music….
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தரும் இன்ப இசை கார்வையில்
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தரும் இன்ப இசை கார்வையில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உமைக்
கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உமைக்
கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
முல்லைப்பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உந்தன்
அருகில் வந்து நின்றேன்
இன்பம் என்னும் பொருளை இங்கு கண்டேன்
தன்னை மறந்து
உள்ளம் கனிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
தேனாறு பாய்ந்தோடும் கலைச்செல்வமே
தரும் திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
No comments:
Post a Comment