Monday, March 17, 2014

எய்ட்ஸ் நோய்க்கு மருத்துவ தீர்வு நெருங்குகிறது? 2 வது ஹெச்ஐவி குழந்தை குணமடைவதாக அறிவிப்பு!

பாஸ்டன்: அமெரிக்காவில் ஹெச்ஐவி பாதித்த குழந்தை ஒன்று மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்து வரும் நிலையில், எய்ட்ஸ் நோய்க்கு மருத்துவ தீர்வு நெருங்குவதாக மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தற்போது குணமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள குழந்தை ஹெச்ஐவி பாதித்து குணமடைந்த உலகின் இரண்டாவது குழந்தையாகும். இந்த குழந்தைக்கு பல்வேறு கடுமையான தொடர் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர், அக்குழந்தை எய்ட்ஸ் நோயிலிருந்து  குணமடைந்து வருவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த எய்ட்ஸ் நோய் தொடர்பானமாநாடு ஒன்றி மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். கடந்த ஆண்டு மிஸ்ஸிஸிபி நகரில் பிறந்த குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், அக்குழந்தைக்கு ஒன்றரை வயது வரை சிகிச்சை அளித்து அந்நோயிலிருந்து குணமடைய வைத்தனர்.  மூன்றரை வயதாகும் அக்குழந்தை தற்போது முழு ஆரோக்கியத்துடன் உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் பிறந்த குழந்தையும் மிஸ்ஸிஸிபி நகரில் பிறந்த குழந்தைக்கு காணப்பட்டதைப்போன்றே ஹெச்ஐவி பாதிப்புடனேயே பிறந்தது. அக்குழந்தைக்கும் பிறந்த 30 மணி நேரத்தில், அதேப்போன்ற சிகிச்சையை அளிக்க தொடங்கினர் மருத்துவர்கள். தற்போது லாஸ் ஏஞ்சல் குழந்தையும் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபட்டு நல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

இதே ரீதியில் அடுத்தக்கட்டமாக எய்ட்ஸ் நோய்க்கான மருத்துவ சிகிச்சை பெரியவர்களுக்கும் பலனளித்தால், எய்ட்ஸ் நோய்க்கான மருத்துவ தீர்வை நெருங்கிவிடலாம் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். thanks http://news.vikatan.com/

No comments:

Post a Comment