Monday, February 3, 2014

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்


P சுசீலா அம்மாவின் இனிமையான வித்தியாசமான குரல் இந்த பாடலில். அதற்காகவே இந்த பாடலை பலமுறை கேட்கலாம். வேதாவின் இனிமையான இசை.

திரைப் படம்: நான்கு கில்லாடிகள் (1969)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வேதா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: L பாலு
நடிப்பு: ஜெயசங்கர்,  பாரதி
 செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

No comments:

Post a Comment