Wednesday, February 26, 2014

சில விலங்கியல் வினோதங்கள்!


1. Madagascan Hissing Cockroach: இவ்வகை கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் நேரடியாக குஞ்சாக பிறக்கும் குணமுடையது. ஒரு சிலபூச்சியினங்களில் மட்டுமே இந்த பண்பு உண்டு. பொதுவாக நம் வீடுகளில்காணப்படும் கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது

2. ஒட்டகங்களின் பால் தயிராக மாறாது. 

3. Hamsters: இந்த இன எலிகள் ஒரு நேரத்தில் ஒரு கண்ணை மட்டுமே இமைக்கும்.

4. ஆடு மற்றும் ஆக்டோபஸின் கண்ணின் கருவிழிகள் செவ்வக வடிவில் இருக்கும். பொதுவாக எல்லா விலங்குகளுக்கும் கருவிழி வட்ட வடிவமாகவே இருக்கும்

5. எல்லா முள்ளம்பன்றிகளும் தண்ணீரில் மிதக்கும் தன்மையுடையது.

6. Copperhead snake: இந்தவகை பாம்புகளின் மணம் (smell) புதிதாக வெட்டிய வெள்ளரிக்காவின் மணத்தை போன்று இருக்கும். 

7. Tasmanian devils: இந்த விலங்கினம் ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள டாஸ்மேனியன் தீவில் காணப்படும். இவை கோபப்படும் பொது அதன் காதுகள் இளம் சிவப்பு நிறமாகிவிடும் (Pinkish red).

8. Iguana: மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த விலங்கினம் தண்ணீருக்கடியில் 25 நிமிடத்திக்கு மேல் இருக்கும் திறனுடையது.

9. பூனைகளுக்கு நான்கு வரிசை whiskers இருக்கும் (மீசை போன்று நீண்டு இருக்கும் ஆனால் மீசை அல்ல - உங்களுக்கு தெரிந்தால் தமிழ் படுத்தவும்) .

10. இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து அன்னபறவைகளும் Sturgeons எனப்படும் மீன்களும் இங்கிலாந்து நாடு ராணிக்கே சொந்தம். அதையும் மீறி அதனை பிடிப்பவர்களுக்கு மிக பெரிய தண்டனை விதிக்கப்படும்.

11. கரடிகளுக்கு 42 பற்கள் உண்டு.

12. மிக சமீபத்தில் உருவாக்கபட்ட நாயினம் Bull Boxer தான். அமெரிக்காவில் 1990-1991 ஆம் ஆண்டு உருவாக்க பட்டது.

13. கன்னித்திரை என அழைக்கப்படும் Hymen மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும்மட்டுமே உண்டு.

14. Sea wasp (Box Jelly Fish) எனப்படும் ஜெல்லி மீன்கள் சுமார் அறை இன்ச் அளவே இருக்கும் இவை மாற்ற ஜெல்லி மீன்களை விட அதிக விஷம் உடையது.

15. நியூசிலாந்து நாட்டில் காணப்படும் கிவி (Kiwi) இடும் முட்டைகள்தான் உலகிலே மிக பெரியாது அவற்றின் உருவத்துடன் ஒப்பிடும்போது





No comments:

Post a Comment