Sunday, January 26, 2014

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்


ஏசு பிரான் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைத்துலக மக்களுக்கும் எங்களுடைய அன்பான மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

நமது ஏசுபிரான் கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற அருமையான வாசகத்தை தந்துள்ளார். அதன் விளக்கத்தை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நல்ல நாளில் தெரியப் படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன? எதைக் கேட்க வேண்டும்?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும்.

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்.

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன? நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும். மேல் நிலைக்கு செல்வதற்கு, என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும். அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும்?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும். அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது. அதை தட்டினால் திறக்காது. சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது. அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும். அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும்.

அந்த சாவியை எப்படிப் பெறுவது?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும் ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும். நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும், நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும். அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம். இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும். அவை யாதெனில் கடவுள் தயவு, ஜீவர்கள் தயவு என்பதாகும். அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும். கடவுள் அருள் ஜீவர்கள் அருள். அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்றுக் கடவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும். அந்த அருள் எங்கு இருக்கும் என்றால், கடவுளின் கோட்டையாகிய பரலோகமாகும் அதாவது பரமாகாசமாகும்.

அந்த கடவுளின் கோட்டைக் கதவு சாத்தப் பட்டு இருக்கும். அந்தக் கதவை திறப்பதற்கு அருள் என்னும் திறவு கோல் வேண்டும். அந்த அருள் எதனால் பெறமுடியும் என்றால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் உயிர் இரக்கம் வேண்டும். அந்த இரக்கத்தின் வாயிலாக நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும். அந்த அருள் உடம்பு முழுவதும் பரவி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும். அந்த ஒளி உடம்பைக் கொண்டு ஆண்டவர் இருக்கும் கோட்டையின் கதவை திறந்து தட்ட வேண்டும். அப்பொழுதுதான் கதவு திறக்கும். அந்த அருள்தான் சாவியாகிய திறவு கோலாகும்.

ஆதலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும். அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும்.

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்.

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம், அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது. அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளது.  அதுதான் கோட்டையின் கதவு என்பதாகும். அந்தக் கதவை தட்டினால் திறக்காது. ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும்.

இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதாகும் .

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMTk3MV9xMmtkTl9jOWFj/Kelungal%20tharapadum.mp3






கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா 
 சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே 
ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானது என 
இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே 
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே

இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே

இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே 
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே

தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே


நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள் என்று 
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள 
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார்  
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார் 

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார் 
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தானே 
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடு
த்தானே 



ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே 
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே

தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே 
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே 



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

No comments:

Post a Comment