கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றுஎலிகள் மீது பரிசோதனை நடத்திஅவற்றின் கணையத்தில் இருக்கும் அசினார் செல்களை பேட்டா செல்களாக மாற்றுவதன் மூலம் அவற்றின் ரத்தத்தில் உள்ள இயற்கை இன்சுலின் மற்றும் குளூகோஸ் அளவுகளை மீண்டும் நிலை நிறுத்தும் முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்கள். மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளால் அசினார் செல்களை பேட்டாசெல்களாக மாற்றுவது சாத்தியம் என்று முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மைக்கேல் எஸ்.ஜெர்மன் சோதனைச்சாலையில் மருத்துவ முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வரும் லூக்பேயன்ஸ் கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.
இந்தஆய்வு முடிவு முதலாம் வகை சர்க்கரை நோயாளர்களுக்கும், பேட்டா செல்களின் தவறான செயல்பாட்டின் காரணமாக இரண்டாம் வகை நோயர்களுக்கும் குணமளிக்கும் என்று நம்பிக்கை தரும் சிகிச்சை முறை கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. எலிகளில் செய்யப்பட்ட சோதனைகள் மனிதருக்கும் மாற்றப்பட்டு வெற்றி அடைந்தால், முதலாம் வகை சர்க்கரை நோயர்களுக்கு மருந்து மூலம் சிகிச்சை அளித்து புதிய பேட்டா செல்களை உற்பத்தி செய்தால் முதல் வகை சர்க்கரை நோயர்கள் பெரிதும் நன்மை அடைவார்கள் என்று நேச்சர் பயோடெக்னாலஜியில் எழுதிய கட்டுரையில் டாக்டர் பேயன்ஸ் கூறியுள்ளார். பேட்டா செல்கள் அதிநுட்பமான செல்கள். அவை ஒரு இறுக்கமான கட்டுப்படுத்தப்பட்ட வழியில் ஏராளமான இன்சுலினை உற்பத்தி செய்கின்றன.

No comments:
Post a Comment