முற்காலத்தில்
தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக
சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என
அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும்,மணிமேகலையு ம் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க
மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த
பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். குண்டலமும்
கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி. .குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும்
நூல்.
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு
No comments:
Post a Comment