Tuesday, November 19, 2013

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம்

 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு. 1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை.. சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார். அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை. சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது. தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. "இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் " என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்.. அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார். நண்பர்களே இதை படித்து விட்டு like போடவேண்டும் என்பது இந்த பதிவின் நோக்கமல்ல. படித்து விட்டு இனி இந்த காங்கிரசுக்கு நான் வாக்களிக்க மாட்டேன் என உறுதி கொண்டவர்கள் like செய்யுங்கள். தயவு செய்து பகிருங்கள்.

No comments:

Post a Comment