காட்டாமணக்கின் பயன்பாடு ஏராளம்...
பொதுவாக காட்டாமணக்கு என்றால் இயற்கை எரிபொருளை கொடுக்கும் தாவரம் என்று கூறுவர். ஆனால், காட்டாமணக்கு ஒரு சிறந்த மூலிகை பயிர் ஆகும். இது அனைத்து பகுதிகளிலும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. காட்டாமணக்கு தாவரத்தில் இருந்து வரும் பால் போன்ற திரவம் பல் வலிக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
காட்டாமணக்கின் நுனிக்குச்சிகளை கொண்டு பல் துலக்கும் கிராமத்தினர் தற்போதும் உண்டு. இதனால் பல் சொத்தை, பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த பால் போன்ற திரவத்தில் ஜெட்ரோபின், ஜெட்ரோபாம், காகேன் போன்ற வீரியம் நிறைந்த ஆல்கலாய்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும், இந்த வெள்ளை திரவத்தை தேள் அல்லது தேனி கொட்டிய இடங்களில் வைத்தால் கொட்டிய பூச்சியின் கொடுக்கு வெளியில் வந்துவிடும் எனவும் கிராமங்களில் கூறுவர். காட்டாமணக்கின் இலைச்சாறும் மருத்துவத்திற்கு உதவுகிறது. இதில் அபிஜெனின், விட்டெக்சின், ஜசோவிட்டெக்கின் என்கின்ற மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் மலேரியா, மூட்டுவலி, தசைவலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மேலும், மஞ்சள்காமாலை, புற்றுநோய், இருமல், கக்குவான், வீக்கம், வயிற்றுப்புண், நிமோனியா, வீக்கம், வாதநோய்களை குணப்படுத்த உதவுகின்றன என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றன.
இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பாம்புகடிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வேரை இடித்து சாறாக்கி கொப்பளித்தால் பல் ஈறுகளில் இருந்து வடியும் ரத்தகசிவை உடனடியாக நிறுத்தலாம். இத்தாவரத்தின் விதையில் மட்டும் சில நச்சுப்பொருட்கள் உள்ளதால் இதை மட்டும் மருத்துவத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியாது. இன்றைய காலகட்டங்களில் பல மூலிகை பயிர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதில், காட்டாமணக்கு பயிரையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment