Monday, July 29, 2013

கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-

வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. இது வயதானவர்களுக்கான பிரச்சனை மட்டும் என எண்ண வேண்டாம். இப்பொழுது நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விசயமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?

கொலஸ்டரோல் உங்கள் இரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும். வெளிப்படையாக உங்களுக்கு உடலுழைவோ, கழுத்துழைவோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறெந்தப் பிரச்சனையோ இருக்கப்; போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்ல,
பக்கவாதம்,

மாரடைப்பு

சிறுநீரக நோய்கள்,

கண்பார்வை பாதிப்பு,
போன்ற கடுமையான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

என்ன பரிசோதனை

வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாத பிரச்சனை என்பதால் இரத்தப் பரிசோதனை மூலமே ஒருவருக்கு இந்நோய் இருப்பதைக் கண்டறியலாம்.
Lipid Profile என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த இரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்துவதில் தவறில்லை.

யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்?

25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.

ஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ள ஏனையவர்களுக்கும் வயது வித்தியாசமின்றிச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.

பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளோர்

நீரிழிவு நோயாளிகள்

சிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்

இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர். அதாவது மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோயுள்ளவர்களும் அதுவரக் கூடிய சாத்தியமுள்ளவர்களும்.

தமது இரத்த உறவுகளில் மேற் கூறிய இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர்

கொழுத்த உடல் வாகுடையோர் ( BMI >25)

புகைபிடிப்போர்

உடலுழைப்பு அற்ற தொழில் செய்பவர்கள்

மாதவிடாய் முற்றாக நின்ற பெண்கள்
அத்தகையோர் வயது வேறுபாடின்றி தமது இரத்த கொலஸ்டரோல் அளவை அறிந்திருப்பது அவசியமாகும்.

இரத்த கொலஸ்டரோலில் Total Cholesrterol, LDL , HDL, triglygeride எனப் பல வகைகள் உண்டு. ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL (Low density lipoprotein) கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.

ஏன் அதிகரிக்கின்றன?

இவை அதிகரிப்பிற்கு
உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன.
ஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.

ஏனைய காரணிகள்

குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.
பரம்பரை அம்சங்கள் 15% சதவிகிதம்,

அதிகரித்த எடை 12% சதவிகிதம்,

ஹோர்மோன்களும் நொதியங்களும் 8% சதவிகிதம்,

உயர் இரத்த அழுத்தம் 8% சதவிகிதம்,

அதிக மது பாவனை 2% சதவிகிதம்,

மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 % சதவிகிதம்,

நீரிழிவு 7% சதவிகிதம்,

உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6% சதவிகிதம்,

புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6% சதவிகிதம்,

ஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5% சதவிகிதம்
எனச் சொல்லப்படுகிறது.

இவற்றில் மிக உயர்ந்த அளவான 25% சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே.

எனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15% சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

செய்ய வேண்டியவை

1. கொலஸ்டரோல் மிகுந்துள்ள உணவுகளைக் குறையுங்கள்

2. உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறையுங்கள்

3. நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளை (தவிடு நீக்காத தானிய வகைகள், காய்கறிகள், பழவகைகள்) கூடுதலாக உட்கொள்ளுங்கள்

4. புகைப்பராயின் அதை நிறுத்துங்கள்

5. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்

6. எடையை உங்களது உயரத்திற்கு ஏற்றவாறு வைத்திருங்கள்.

7. மதுபானத்தைத் தவிருங்கள்.

8. மருத்துவ ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளுங்கள்

9. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத எடை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிக அவசியம்.

நன்றி= ஹாய் நலமா
Photo: கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-

No comments:

Post a Comment