Thursday, July 25, 2013

பிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்!


 திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய திருக்குறள் பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ் நாட்டு ரயில்களில் எழுதப்பட்டுள்ளத ு. அய்யன் திருவள்ளுவர் அழகு தமிழில் எழுதிய 1330 குரல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது.
திருக்குறளை தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்களும் படித்து வருகின்றனர். சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் குரல் மண்டபத்தில் 1330 குரள்களும் பொறிக்கப்பட்டுள ்ளது. மேலும் உலக மக்கள் கொண்டாடும் வள்ளுவருக்கு குமரி கடலில் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ள து.வள்ளுவரின் குரல்கள் தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ளத ு. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரான்ஸ் நாட்டு ரயில்களிலும் திருக்குறள் எழுத்தப்பட்டுள் ளது என்று உங்களுக்கு தெரியுமா? பிரான்ஸ் நாட்டு ரயில்களில் பிரெஞ்சு மொழியில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளத ு. அதன் அருகில் திருவள்ளுவரின் பெயர் எழுதப்பட்டுள்ளத ு.
புகைப்படத்தில் உள்ள குறள் இது தான்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

விளக்கம்: திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஔி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்!

No comments:

Post a Comment