Monday, April 1, 2013

மகேந்திரனின் திரைப்படங்கள் இணையத்தில்...

மகேந்திரனின் திரைப்படங்கள் இணையத்தில்...

முகநூல், மின்னஞ்சல், இணையம் என எங்குமே தொடர்பில் இல்லாத ஒரு நண்பர் புதிய தலைமுறையில் இதழில் வெளிவந்த என்னுடைய நேர்காணல
ை கண்டதும், சில வருடங்களுக்கு பின்னர் தொலைப்பேசியில் அழைத்து, எனக்கு மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் எங்காவது கிடைக்குமா என்று கேட்டார். ஐந்து வருடமாக தேடிக் கொண்டிருக்கிறேன், நண்பர்களிடம் சொல்லி, இணையத்திலும் தேட சொன்னேன், தமிழ்நாடு முழுவதும் தேடி அலைந்தேன் எங்குமே கிடைக்கவில்லை. நீங்களாவது எங்காவது இருந்தால் எனக்கு வாங்கித் தரமுடியுமா என்றார். அவர் பேச்சில் இருந்த வாஞ்சையும், விரக்தியும் என்னை ஏதோ செய்தது. வாஞ்சியூர் அல்லது வழஞ்சியூர் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கிராமத்தின் பெயரை சொன்னார். நான் அப்போதும் மகேந்திரனிடம் பேசி, இந்த நண்பரின் தேடல், வெறி பற்றி சொன்னேன். அவர் எப்போதும் போல் என்னிடம் இல்லை என்று கூறிவிட்டார்.

ஆனால் அந்த நண்பரின் கோரிக்கையை என்னால் நிராகரிக்க முடியவில்லை. என்னக் காரணத்திற்காக அந்த நண்பர் இந்தப் படத்தை பார்க்க இத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும். எல்லாமே சினிமாவின் மேல் உள்ள காதலால்தானே. எப்படியாவது அவருக்கு இந்த படத்தை தேடிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. இன்று நண்பர் அமரதாசிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த படத்திற்கான இணைப்பை கொடுத்தார். ஆச்சர்யம், நான் தேடி கிடைக்காத அதே இணையத்தில்தான் இருக்கிறது. ஆனால் அந்த நண்பர் இப்போது தொடர்பில்லை. அவரது எண்ணும் என்னுடைய பழைய அலைப்பேசியோடு போய்விட்டது. அந்த சினிமா காதலனுக்கு நான் எப்படி இந்த திரைப்படத்தை காணக்கொடுப்பேன். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவரைப் போல் சில பேராவது தீராத வெறியுடன் மகேந்திரனின் சில படங்களை காண காத்திருக்க கூடும். அவர்களுக்காக மகேந்திரனின் இந்த திரைப்படங்களை காணக் கொடுக்கிறேன். இணையத்தில்தான் இருக்கிறது. ஆனால் அவசியம் பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

நீங்கள் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அல்லது நீங்கள் பார்க்காவிட்டாலும், குறைந்தது சேர் (Share) செய்யுங்கள். அந்த நண்பர் மாதிரியான பல நண்பர்களுக்கு இந்த படங்கள் போய் சேரட்டும்.


நெஞ்சத்தைக் கிள்ளாதே: http://www.youtube.com/watch?v=yWw55P7liyc

நண்டு: http://www.youtube.com/watch?v=F060AvXMhb4

மெட்டி: http://www.youtube.com/watch?v=ivLMoVUkceE

பூட்டாத பூட்டுக்கள்: http://www.youtube.com/watch?v=dG8yQl3qDBE

முள்ளும் மலரும்: http://www.youtube.com/watch?v=yV7b76khr7A

No comments:

Post a Comment