Monday, February 11, 2013

மகேஸ்வர வடிவம்

மகேஸ்வர வடிவம் 25 பேதங்களை உடையது.
*********************
இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று.

1) சந்திரசேகரர்
2) உமாமகேஸ்வரர்
3) இடபாரூடர்
4) சபாபதி
5) கல்யாணசுந்தரர்
6) பிட்சாடனர்
7) காமாரி
8) காலாரி
9) திரிபுராரி
10) சுவந்தராரி
11) மாதங்காலி
12) வீரபத்திரர்
13) அரியர்த்தர்
14) அர்த்தநாரீசுவரர்
15) கிராதர்
16) கங்காளர்
17) சண்டேசானுக்கிரகர்
18) நீலகண்டர்
19) சக்கரப்பிரதானர்
20) கஜமுகானுக்கிரகர்
21) சோமாஸ்கந்தர்
22) ஏகபாதர்
23) சுகாசீனர்
24) தட்சிணாமூர்த்தி
25) லிங்கோத்பவர் என 25ரும் மகேஸ்வர மூர்த்தியாவர்.

இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக
சரபமூர்த்தி,
வாகமூர்த்தி,
க்ஷேத்திரபாலகமூர்த்தி,
ஏகபாததிரிமூர்த்தி
முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன. இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தியின் சதாசிவ மூர்த்தியின்
1) ஈசானம்
2) சத்தியோஜாதம்
3) வாமதேவம்
4) அகோரம்
5) தற்புருடம்
என்னும் 5 முகங்களின் அம்சத்தையும்
அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

No comments:

Post a Comment