Monday, October 8, 2012

இந்து மத கடவுள்களை ஆயிரம் கைகள் கொண்டவர்களாக வரைகிறார்களே... அப்படி ஒருவர் இருக்க முடியுமா என்ன?"




"அகந்தையே இன்றி பல நற்காரியங்களைச் செய்த பெரியவர்கள் யாரையாவது நீங்கள் நேரில் பார்த்துப் பழகியது உண்டா? இவ்வளவு பெரிய சாதனையை நீங்கள் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதுண்டா? அப்படிக் கேட்டால், இப்படி ஒரு அற்புதமான பதில் வரும்...

''இந்தக் காரியத்தைத் தொடங்கும்போது, கையில காசே கிடையாது. 'எந்த நம்பிக்கையில தொடங்கறே'னு பலபேர் கேட்டாங்க. ஆனாலும் கடவுள் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிச்சோம். யார் யாரோ உதவி செஞ்சாங்க. எங்கெங்கெல்லாமோ இருந்து பணம் வந்துச்சு. அவங்களுக்கு எல்லாம் இதைப் பத்தி யாரு சொன்னாங்கன்னு கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், உதவி கிடைச்சுகிட்டே இருந்தது'' என்பர்.

மிக உயர்ந்த நல்ல காரியங்களை அகந்தையின்றி நடத்துவோரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்கலாம். உதாரணம்... கல்கத்தாவில் உருவான ராமகிருஷ்ண மடம், அன்னை தெரசாவின் சேவை நிறுவனம், இன்னும் பல கும்பாபிஷேகங்கள் மற்றும் அன்னதானங்கள்.

இப்படி, ஒப்பற்ற நல்ல காரியங்களுக்காக எங்கெங் கிருந்தோ உதவிக் கரங்கள் நீளுகின்றனவே... அவை யாவும் கடவுளின் கரங்களே என்பதுதான் அந்த ஓவியத்தின் அர்த்தம்.

No comments:

Post a Comment