Monday, October 15, 2012

காலம் செய்யும் உதவியைக் கடவுள் செய்ய மட்டான். கவியரசர்

செந்தாமரையில் நான் எழுதிய பாடல் ஒன்று
சரியாக அமையவில்லை என்று உடுமலை நாராயணக்கவியை 
அழைத்துத் திருத்தச் சொன்னார்கள். 
அவர் இரண்டு நாள் முயற்சி செய்து விட்டு 
இதற்கு மேல் இதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். 
அந்தப்பாடல் நன்றாகவே இருந்தது. ஆனால்
புகழ் பெறாத ஒருவன் எழுதியதால்,
மற்றவர்கள் கண்ணுக்கு குறைவாகவே பட்டது.
ஆனால் புகழ் பெற்று விட்ட ஒருவன் ஒருகாகிதத்தில்
ஏதாவது கிறுக்கி வைத்தால் அதுவும் ஒருகவிதைப் போல தோன்றும்.
புகழ் இல்லாத ஒருவன் எவ்வளவுதான் உயர்ந்த கவிதை எழுதினாலும்
அதன் தரம் குறைவாகவே தெரியும். பொதுவாகவே மனிதர்களின்
கண்ணோட்டம் இதுதான். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
இன்று நான் தவறாகவே ஒன்றை எழுதிவிட்டாலும் அதை தவறு என்று
ஒப்புக்கொள்ளாமல் புது அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள் ரசிகர்கள்.
ஆனால் அன்று நான் சரியாக எழுதியது கூடத் தவறாகத் தெரிந்தது.
அதை சிந்தித்துப் பார்க்கக் கூடி சக்தியும் எனக்கிருந்தது.
காலம் செய்யும் உதவியைக் கடவுள் செய்ய மட்டான்.
என எண்ணி நான் காத்திருந்தேன்."
-கவியரசர் (வனவாசம்)

No comments:

Post a Comment