Sunday, September 16, 2012

MGR and ANNA Rare Photo

''அரசியல் லாபம் அண்ணாவின் லட்சியமல்ல!''

எம்.ஜி.ராமச்சந்திரன்

ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து...

இருபத்தைந்து ஆண்டுக ளுக்கு முன்பு, முதன்முறையாக அண்ணாவை நான் சந்தித்தேன். நான் தூய கதராடை அணிந்து, காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத் தினராக இருந்தேன். அண்ணா அவர்களோ, திராவிடர் கழகத் தின் முக்கிய தலைவர். ஆனாலும், ஓர் அரசியல் தலைவர் என்ற முறையில் நான் அவரைச் சந்திக்க வில்லை. ஒரு நடிகன், ஒரு நாட காசிரியரைச் சந்திக்கும் முறையில் தான் எனது முதல் சந்திப்பு அமைந்தது. சென்னையில் நடை பெறவிருந்த, அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் சிவாஜியாக நடிக்க வைப்பதற்காகத்தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட் டன. இன்று அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, சுமார் 20 ஆண்டு களிலே மாபெரும் இயக்கமாக வளர்த்து, 70 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றிருந்த காங்கி ரஸை வீழ்த்தி, இந்தியத் துணைக் கண்டத்திலேயே, ஒரே எதிர்க்கட்சி ஆட்சியை ஏற்படுத்தும் அளவிற்கு மக்களின் பேராதரவைப் பெற்ற மகத்தான அரசியல் தலைவர்.

எந்த ஆயுதத்தையாவது பயன் படுத்தி, எந்த முறையைக் கையாண் டாவது அரசியல் லாபம் பெறுவது என்பது அவருடைய லட்சியமல்ல; அவருக்குத் தன்னுடைய சக்தியில் முழு நம்பிக்கை உண்டு. எழுத் திலோ பேச்சிலோ இயக்கத்தை நடத்திச்செல்வதிலோ யாருக் கேனும் இடம் அளித்துவிட்டால் அவர்கள் தன்னை அழித்துவிடு வார்கள், தன் செல்வாக்கைப் பறித்துவிடுவார்கள் என்ற எண் ணமே இல்லாதவர் அண்ணா. மாற்றாரின் திறமைக்கு மதிப் பளிப்பதிலே ஈடற்றவர். இந்தப் பண்புதான் அவரைப் பெரியா ரிடத்திலே பதினைந்து ஆண்டு களுக்கு மேலாகப் பணியாற்ற வைத்தது. இந்தப் பண்புதான் பெரியாரையே எதிர்த்து வெற்றி காண வைத்தது.

அண்ணா அவர்களின் பாச மிகு குடும்பத்திலே ஓர் உறுப்பின னாக வாழும் பேறு பெற்றதை எண்ணி எண்ணி மகிழும் நேரத் திலே அண்ணனுக்கு 60-வது பிறந்த நாள். குடும்பத் தலைவ னுக்கு 60-வது பிறந்த நாள். நாட்டின் முதல்வருக்கு 60-வது பிறந்த நாள். ஆம்... அன்புள்ளத் திற்கு, பண்புள்ளத்திற்கு 60-வது பிறந்த நாள். இந்த நாளிலே நம்முடைய பாச உள்ளங்களை அவருடைய பாதங்களிலே படைத்து மகிழ்வோம்.

No comments:

Post a Comment