Monday, September 10, 2012

உலகம் ஆண்ட லெமூரியன்


 
லெமூரியர்களுக்கு பல அரிய பொருள்கள் தெரிந்திருந்தன. தண்ணீரை எதிர்ப்பக்கம் தள்ளும் ஆற்றல் மிக்க 'கல்' அவர்களுக்கு தெரிந்திருந்தது. படகைத்தள்ள அந்த கல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். நீராவிக் கருவி, வான ஊர்தியும் தெரிந்திருந்ததாகவே கருதப்படுகிறது.'ஒளி' பற்றி அதிசயம் ஒன்று உண்டு! மின்சாதனத்தைவிட ஏதோ ஒரு வகையில், இரவை பகலாக்கும் அளவுக்கு ஒளிரச் செய்திருக்கிறார்கள். கலிபோர்னியா காட்டில் இன்றும் நெடுந்தூரம் வரை வீசும் ஒளி தெரிகிறது. அங்கே பழங்குடி மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்.

அடுப்பில் சமைத்தவர்கள், நெருப்பு, அல்லது வெய்யிலை பயன்படுத்தி சமைத்திருக்கலாம். வீடுகள் காற்றோட்டமாக அமைக்கப்பட்டது. தெருக்கள் சிமெண்டைப் போல பொருளால் அமைக்கப்பட்டது. ஒட்டகம் போல ஒருவகை விலங்கின் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். இதெல்லாம் அவர்கள் வரைந்த ஓவியங்கள் மூலம் அறியப்படுகிறது. பொன்னும் வெள்ளியும் அன்று இருந்தன. அணிகலன்களுக்கு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால், பொன்னைவிட விலை உயர்ந்த பிளாட்டினம் போன்ற ஒன்றையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்! "லெமூரியா பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. லெமூரியாவில் மிச்சம் இருந்தவர்களே 'சித்தர்கள்' என்று பன்மொழிப்புலவர் அப்பாதுரை கூறுவார் பழந்தமிழ் மக்கள் லெமூரியர்களையும், எகிப்தியர், அமெரிக்க மாயா நகர மக்களையும் ஒத்திருந்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

எனவே ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மாயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும்இ உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்திருக்கிறது.

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு அதன்கோடு ஆண்டுகோடு இடைகோடு மெக்கோடு நெட்டன்கோடு திருவிதாங்கோடு பரகோடு வெள்ளைக்கோடு கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா மடகாஸ்கர் மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தென்அமெரிக்கா மேல்கரை, பஜகாலிபோர்னியா, நெவதா முதலிய இடங்களில் ஒருவகை கல் அமைந்த வேலைப்பாடுகள் காணப்படுகிறது. இவை கருங்கல்லைவிட உறுதியானவை. இவற்றை சிமெண்டை விட உறுதியான குழம்பு கொண்டு, சேர்த்து கட்டம் கட்டி இருக்கிறார்கள். அந்த கல் எங்கும் இன்று இல்லை.

திரிகோணப் பாறை எனப்படும் விவேகானந்தர் பாறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் 36 மீ ஆழத்தில் 15000 சதுர அடியில் பழைய கால இடிபாடுடன் கூடிய கோயில் உள்ளது. இதனை டாலமியும் சொல்லியுள்ளார். பின்பு, இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஆய்வு செய்தபோது இது வரை நான்கு இட்பாடுகள் உள்ள இடங்களும் மற்றும் ஒரு தீவு மூழ்கி உள்ளதும் தெரியவந்தது. இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய லெமூரியாவை குறித்து இன்னும் பல ஆராய்ச்சி செய்ய வேண்டும். லெமூரியா கல் வெட்டுகளையும், சிந்துநதி பக்கமுள்ள கல் வெட்டுகளையும் புரிந்து முயலும்போது இன்னும் பல புதிர்கள் அவிழும். தமிழ் இனம் பற்றி பல புதுமைகள் அறிய முடியும்."

No comments:

Post a Comment