சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் கறிவேப்பிலை :
10 வருடங்களுக்கும் மேலாக சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு டயபட்டிக் நியூரோபதி வலி (Diabetic Neuropathic Pain) உண்டாகும். அதாவது, ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுவதால், புற நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகி ஏற்படும் வலி இது. கறிவேப்பிலையில் நிறைந்துள்ள ‘கார்பஸோல் ஆல்கலாய்டு’ (Carbazole alkaloids) என்கிற வேதிப் பொருளுக்கு இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு.
‘ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கறிவேப்பிலையின் பங்கு அதிகம்’ என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்து உள்ளனர். இதனை ‘கிளைக்கோசிலேட்டட் ஹீமோகுளோபின்’ (Glycosylated Hemoglobin & HbA1c) பரி சோதனை மூலம் அறியலாம். இது தவிர, உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு வகையான ஹெச்.டி.எல். (High Density Lipo Protein) அளவையும் கறிவேப்பிலை உயர்த்துகிறது. கறிவேப்பிலை இலையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தினசரி காலை, மாலை 10 கிராம் வீதம் நீரில் கலந்து பருகி வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
No comments:
Post a Comment