Friday, July 27, 2012

மின்சாரத்தை சேமித்திட சில கருவிகள்!


மின்சாரம் இருந்தாதானடா சேமிக்கிறது! என நீங்கள் புலம்புவது கேட்கிறது. இருந்தாலும் மின்சாரம் இருக்கும்போது வீணாய் போவதை எப்படி சேமிக்கலாம் என்பதே இந்த பதிவு. நாம் பயன்படுத்தும் தொலைகாட்சி மற்றும் எல்லா மின் பொருட்களுமே, நாம் அவைகளை பயன் படுத்தாமலிருக்கும்போதே அதாவது அவை Standby-ல் இருக்கும்போதே சுமார் 30% மின்சாரத்தை எடுத்துக்கொண்டே இருக்கும்.இப்படி நாம் பயன்படுத்தாமலிருக்கும் போது அவைகளின் மின் இணைப்பை சில கருவிகள் துண்டித்து விடும். சில கருவிகள் அவை எப்போது எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறது என்றும், சில கருவிகள் நாம் பயன்படுத்தாத உபகரணங்கள் எவ்வளவு பணத்தை எடுக்கும் என்பதையும். சில கருவிகள் அவைகளின் தேவைக்குண்டான மின்சாரத்தை மட்டும் அனுமதிக்கும் என்பதையும் பற்றிய பதிவு இது. இன்றைய தொலைகாட்சிகள் presence sensor என்னும் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளன! அதாவது நாம் தொலைக்காட்சியின் முன்பிருந்து சென்று விட்டோம் என்றால் அது தானாகவே அணைந்துவிடும். மீண்டும் நாம் வந்த்ததும் செயல்பட தொடங்கும். இதன் மூலம் வீண் மின் விரயத்தை குறைக்கிறது. ஆனால் பழைய தொலைக்காட்சிகளில் இவை இல்லாததால் நாம்தான் மின் விரயத்தை கட்டுப்படுத்த வேண்டும். காரணம் தொலைக்காட்சிகள் standby-ல் இருக்கும் போதே சுமார் 3௦% முதல் 5௦%வரை மின்சாரத்தை எடுத்துக்கொண்டிருக்கும்(மாடலை பொறுத்து).கூடவே ஆயுளையும் குறைத்துவிடும்.
மேலே படத்தில் கொடுத்துள்ள மின் பிளக்கில் நாம் தொலைகாட்சி DVD பிளேயர் போன்றவற்றை பயன்படுத்தினால், நாம் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்தி அணைக்கும் போது, மொத்த மின் இணைப்பையும் துண்டித்து விடும். Standby-ல் இருக்காது. இது infra-red மூலம் செயல் படுகிறது.
இந்த மின் பிளக்கால் நாம் பயன் படுத்தும் ஒவ்வெரு கருவிகளின் மின் செலவை தெரிந்து கொள்ள முடியும்.
இது மிகவும் பயனுள்ள கருவி, இது இரண்டு கருவிகளாக வருகிறது. ஒன்றை நம் வீட்டின் மின்சார மீட்டரில் phase ஒயரில் பொருத்த வேண்டும். அடுத்தது டிஜிட்டல் கிளாக் போல உள்ளதை நம் கண்ணில் எப்போதும் படும்படியான இடத்தில் வைத்து விட்டால் போதும். இது நம் வீட்டில் மொத்தம் எவ்வளவு மின்சாரம் செலவு ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையும், மொத்தம் எவ்வளவு பணம் அதற்கு ஆகிறது என்பதையும் காண்பித்துக்கொண்டிருக்கும். இதை நான் படுக்கை அறையில் வைத்துள்ளேன். தூங்கும் போது இதை ஒரு முறை பார்ப்பது நல்லது. வீணாக ஏதாவது இயங்கிக்கொண்டிருந்தால் அனைத்து விடலாம்.
இது சுமார் 35% முதல் 4௦% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என நம்பப்படுகிறது. இதை நம் வீட்டின் மீட்டருக்கு மிக அருகில் உள்ள பிளக்கில் பொருத்த வேண்டும். இது வீட்டில் இயங்கும் எல்லா மின் பொருட்களையும் கண்காணித்து அவற்றிற்கு தேவையான அளவு மின்சாரத்தை மட்டுமே அனுமதிக்கும்.
இந்த பிளக் ரிமோட் கண்ட்ரோல்-ஆல் இயங்குவது. எழும்பி போய் அணைக்க சோம்பல் படுபவர்களுக்கு இது மிகவும் நல்லது. Standby-ல் மின்சாரம் வீணாவதை இதன் மூலம் தடுக்கலாம்.
மேலேயுள்ள இரண்டு பிளக்குகளும் infra-red மூலம் செயல்படுபவை. இவற்றில் பொருத்தியுள்ளவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அணைக்கும் போது, standby-ல் இருக்காமல் மொத்த மின் இணைப்பும் போய் விடும். இதில் சில வகைகளில் சில பிளக்குகள் எப்போதும் அணையா வண்ணமும் செயல்படும். நமக்கு நிரந்தரமாக மின்சாரம் தேவைப்படும் பொருட்களுக்காக. நான் இங்கு சொல்லியுள்ள எல்லா கருவிகளும் இணைய சந்தையில் தாராளமாக விற்பனைக்குள்ளன! இலவசங்களை வழங்கும் தமிழக அரசு இது போன்றவற்றை வழங்கலாம். பின்குறிப்பு: நீங்கள் விரும்பினால் இப்பதிவை உங்களின் வலைத்தளம், facebook, twitter-ல் பகிர்ந்து கொள்ளலாம். இது பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசை. விரும்பினால் என் வலைதளத்தின் இணைப்பை கொடுங்கள்.
http://www.tamilcatholican.com

No comments:

Post a Comment