பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.
உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும்.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல்,குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.
இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்திலிருந்து
நீலாம்பரி
|
No comments:
Post a Comment