“ஸ்ரீஅனுமார் லிங்கம்”
கோயில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை பார்க்கும் போது, நாம் நம் தாயின் கருவறையில் இருந்த பாதுகாப்பையும், எந்த மனகவலையும் இல்லாமல் அமைதியாக நிம்மதியாக எப்படி இருந்தோமோ அந்த பேரானந்தத்தை தருகிறது கோயிலில் தெய்வ தரிசனம்.
Born with silver spoon என்பார்களே, அப்படி பணக்கார சீமான்களின் வாழ்க்கையை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அவர்களுக்கு என்ன குறைச்சல்? என நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் அவர்களின் பிரச்சனைகளை விட நமது பிரச்சனை எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்க தோன்றும் அளவுக்கு ஏதேதோ பல துன்பங்கள் அவர்களின் மனதில் இருக்கும்.
புராணங்களில் இருந்து இன்றுவரை இதுதான் நிஜம்.
அரச குடும்பத்தில் பிறந்தவர்தான் ஸ்ரீராமர். இருந்தும் அவருக்கு நிம்மதி இருந்ததா? விதி இவருடைய வாழ்வில் கூனி வடிவிலும் இராவணன் வடிவிலும் விளையாடியது. எந்த வம்புதும்புக்கும் போகாத ஸ்ரீராமர் கூனியின் சதியால் காட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஸ்ரீஇராமர் வனவாசத்தின் போது, அங்கிருந்தும் விதி அவரை துரத்தியது. இராவணன் சீதையை கடத்தி சென்றதால், சீதையை தேடி அலைந்தார். ஆனால் அன்பும் பொறுமையும் கொண்ட ஸ்ரீஇராமரின் குணத்தால் பல நல்லோர்களின் நட்பு அவருக்கு கிடைத்து, அவரிகளின் துணைகொண்டு போராடி இராவணனை கொன்று சீதையை மீட்டார்.
நல்லவனோ தீயவனோ ஆனால் ஒருவனை கொன்றால் தண்டனை உண்டல்லவா? ஸ்ரீஇராமருக்கு தண்டனை கிடைத்தது. அந்த தண்டனைதான் பிரம்மஹத்தி.
அதனால் தன்னுடன் வந்த அனுமனிடம், “நீ காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை கொண்டு வா.” என்றார்.
காசியில் இருந்து ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை கொண்டு வந்ததால், “ஸ்ரீஅனுமார் லிங்கம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக சிவபெருமானை வணங்கினால் சனிதோஷம் நீங்கும். அத்துடன் அனுமார், தன் கரங்களால் காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்ததால், இந்த ஆலயத்தில் சிவபூஜை செய்தால் சனிஸ்வரரால் வரும் தொல்லைகள் நீங்கும். மேலும் படிக்க -
சனிஸ்வரால் வரும் தொல்லைகள் தீர்க்கும் அனுமார் லிங்கம்- http://bhakthiplanet.com/2012/06/sri-ramalinga-swamy-temple-%E2%80%93-papanasam/
No comments:
Post a Comment