அட இவளுந்தான்!
குரல் இவ்வளவு
நன்னாயிருக்கே...
பாட்டு
கத்துண்டிருக்கலாமே...?
அக்ரஹாரத்து
அலமேலு மாமி
சொன்னதுலருந்து
மனசு கெடந்து
மல்லுக்கு நிக்குது
'வார்த்தைப்
பிரயோகங்கள்
சிறப்பா இருக்கே!
தமிழிலக்கியம்
படிச்சிருந்தா
ஒரு வைரமுத்துல
பாதியாவது
வந்திருக்கலாம்....
அப்பாவின் நண்பர்
ஆதி மாமா
சொன்னதுலருந்து
பி.இ., என்பதன்
பெருமை மறஞ்சு
தமிழின் மீது
தாக்கம் பொறந்துருச்சு
"கண்ணுக்கு
லட்சணமா
பொண்ணு
புடிச்சிருக்கான்ல"
"காசிப் பய
கல்யாணத்துல
கேட்ட டயலாக்க,
மூளை அடிக்கடி
ரீவைண்ட் பண்ண
பேசாம....
காசு, பணத்தைக்
கருதாம
அக்கா மகளையே
கட்டியிருக்கலாம்
மனசு கெடந்து
உறுத்துது...
இப்படி,
எதிர்ல நிக்கிறவன்
எடுத்த முடிவுகளே
சரின்னு மனசு கெடந்து
தவிக்குது
எவனப் பாத்தாலும்
கோட்டையப்
பிடிச்சவனாகவும்
என்னயப் பாத்தா
கோட்டைய
விட்டவனாவும்
மூளையும், மனசும்
அழிச்சாட்டியம் பண்ணுது
"எல்லா வலியையும்
எறக்கி
வக்கிற மாதிரி
என்னடி
காபி போடுற,
அதோட கடைசி எழுத்தாட்டம்?"
எறிஞ்சி விழுந்தேன்.
எப்பவும் எதிர்ப்
பேச்சில்லாம
குத்துக் கல்லாட்டம்
நிக்கிறவ...
இன்னைக்கி
வெடிச்சுட்டா!
"படிக்காதவனா
இருந்தாலும்
பரவாயில்ல"ன்னு
என் தாய்மாமன்கிட்ட
கழுத்தை
நீட்டியிருந்தா
இந்தக் கதி
நமக்கு வருமா?
'படிச்சு கிழிச்சவரு'ன்னு
புடிச்சுக் குடுத்தாங்க
இப்பத்தானே தெரியுது...
இங்க மனுசனே
'கவரிங்'குன்னு!"
'அட இவளுந்தான்
கோட்டை விட்டிருக்கா...'
மருது அழகுராஜ்..
#படம் இணையம்#
No comments:
Post a Comment