Wednesday, June 13, 2012

Most Expensive Photograph 4.3 Million Dollars( உலகின் மிகவும் விலை உயர்ந்த புகைப்படம் இதுதான்!!!)


புகைப்படங்களை ரசிக்காத மனங்களே இல்லை எனலாம், மனிதன் தன் வாழ்க்கையில் இழந்துவிட்ட பல சுவாரசியமான நினைவலைகளை மீண்டும் மீட்டித்தரும் அபூர்வமான சக்தி புகைப்படங்களுக்கு இருப்பதுதான் அதன் சிறப்பம்சம், அப்படிப்பட்ட புகைப்படங்கள் சிலவேளைகளில் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஏதாவது சாதனைகளைச் செய்துவிடுவதும் உண்டு,
புகைப்படங்கள் எடுப்பதை ஒரு கலைநயம்மிக்க தொழிலாகச் செய்பவர்கள் பலர் உலகம்முழுவதும் இருக்கின்றார்கள், அதற்கான படிப்புக்களும் பல பல்கலைக்கழகங்களில் இருக்கின்றன, மிகச்சிறந்த புகைப்படங்களை காட்சிப்படுத்த கண்காட்சிகளும் உலகம்முழுவதிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன, அப்படியொரு கண்காட்சியில் ஒரு புகைப்படம் உலகசாதனை படைத்துள்ளது,
புகைப்படத்துறையின் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புகைப்படமாக கீழே காட்டப்பட்டுள்ள புகைப்படம் தெரிவாகியுள்ளது, இதனைப் படம்பிடித்தவர் ஆன்றியாஸ் குருஸ்கி என்பவரவார்,ஒரு மழைநேர செவ்வாய்க்கிழமையில் கடலுடன் கூடிய புல்த்தரையை வர்ணங்கள் ஒன்றுசேர மிக அழகாகக் புகைப்படம் பிடித்து காட்சிப்படுத்தியிருந்தார் மனிதர், அட காட்சிப்படுத்திய கொஞ்ச நேரத்திலேயே விற்கப்பட்டது புகைப்படம், விலை 4.3 மில்லியன் டாலர்கள், இதற்கு முந்திய புகைப்படத்தின் அதிகூடிய விலையாக இருந்த 3.9 மில்லியன் டாலர்களைமிஞ்சி உலகசாதனை படைத்தது அவரது புகைப்படம் இந்தப் புகைப்படத்தின் பெயர் ”ரேய்ன் டூ” என்பதாகும், இன்றுவரை இதுதான் உலகில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட புகைப்படமாகக் இருக்கின்றது.

No comments:

Post a Comment