சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது என்பது தற்போது வழக்கமாகி வருகிறது.
இயற்கையாக பிரசவிப்பதற்கு பொறுத்திராமல் நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் இப்படி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து பிறக்கிற குழந்தைகளுக்கு உடல் பருமன் ஆபத்து இருக்கிறதாம்.
அமெரிக்காவில் மஸ்சாசூசெட்சில் அமைந்துள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வந்த ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சையில் பிறக்கிற குழந்தையின் குடலில் உள்ள பாக்டீரியா பாதிக்கிறது. இதனால் சாப்பிடுகிற உணவின் ஜீரணத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இது குழந்தைக்கு உடல் பருமன் ஏற்பட காரணம் ஆகிறது.
1,255 தாய்மார் மற்றும் அவர்களின் குழந்தைகளிடம் 4 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் தான் இப்படி சிசேரியன் அறுவை சிகிச்சையில் பிறக்கிற குழந்தைக்கு உடல் பருமன் ஆகிற வாய்ப்பு இரு மடங்காக உள்ளது தெரியவந்துள்ளது.
|
No comments:
Post a Comment