Thursday, May 31, 2012

அரிசியில் கவனம்




ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு களின்படி, நாள்தோறும் ஒரு கப் வெள்ளை அரிசி சாதம் உண்பவர்களுக்கு 'டைப்-2' சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரிய வந்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளும் இதனைத் தெரிவிக்கின் றன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் மிக முக்கிய உணவாக, அரிசி உணவையே நாள் தோறும் உண்கின்றனர். எனவே அவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிக அளவில் கிலைசிமிக்ஸ் இன்டக்ஸ் உள்ளது. அதில் எந்த சத்துகளும் இல்லாமல் கார்போ ஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவே அது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

எனவே தற்போது 'டபுள் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி' என வரும் விளம்பரங்களின் மீது நுகர்வோர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

By: Udhai Kumar

No comments:

Post a Comment