Thursday, May 10, 2012

புற்றுநோய்க்கு புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு




புற்றுநோயை குணப்படுத்துவதற்கு தற்போது புதிய ஊசி மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் கீமோதெரபி, ஊசி மருந்து போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கிளாஸ்கோ மற்றும் என்.எச்.எஸ் வோதியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய ஊசி மருந்தை புற்றுநோய் பாதித்த பகுதியில் செலுத்தினால், அதன் பாதிப்பு பெருமளவில் குறைவதுடன், தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஊசி மருந்து பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment