முதன்மையான காரணமாக நீரிழிவைக் குறிப்பிடலாம். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுள் பெருன்பான்மையானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சினை வரும். சில வயதானவர்களுக்கு சிறுநீர் பாதையில் விரும்பத்தகாத அளவில் சதை வளர்ந்து, அடைப்பு ஏற்படும். இதன் மூலம் கிட்னிக்கு பின்னோக்கிய அழுத்தங்கள் அதிகரித்து, அவை பழுதாகக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. சிறுநீர் பிரியும் குழாயின் மேலேயுள்ள தோல்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கூட சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
முதுமை காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுமா?
நிச்சயமாக. ஒரு மனிதனுக்கு நாற்பது வயது கடந்து விட்டாலே அவர்களின் உடலில் உள்ள சிறுநீரகத்தின் வீரியமான செயல்பாட்டில் மந்த நிலை உருவாகத் தொடங்குகிறது. சிறுநீரகம், மனிதனின் உடலில் கழிவு நீரகற்று தொழிற்சாலையாகத் தான் செயல்படுகிறது. இது எப்போதும் ஒரே அளவில் செயல்படுவதில்லை. ஆரோக்கியமான மனிதர்களுக்கும் இது பொருந்தும். இது ஒரு வகையான சுத்திகரிப்பு பணியினை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சோர்வாகத்தான் மருத்துவத்துறை இதனை பார்க்கிறது.
திராட்சைச் சாறு அருந்தினால்சிறுநீரகத்தில் கல் உருவாகுமாம். உண்மையா?
பழச்சாறுகளை விட கோககோலா, பெப்சி கோலா ஆகியவற்றை அருந்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கான வாய்ப்பு உண்டு.
ஏனெனில் அதில் தான் ஆக்சிலேட்கள் அதிகமுண்டு. இந்த ஆக்சிலேட்டு கள் தான் சிறுநீரகத்தில் கல்லை உருவாக்குகின்றன. ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.
தக்காளிப்பழத்திலும் ஆக்சிலேட்டுகள் அதிகமுண்டு. அதனால் தக்காளியை நேரடியாகவோ அல்லது தக்காளிச் சாறாகவோ அருந்தக்கூடாது. அதற்கு பதிலாக தக்காளியை ரசத்திலோ, குழம்பிலோ பயன்படுத்தி சாப்பிடலாம்.
சிறுநீரக சிக்கல்களுக்கு தண்ணீர் அருந்துவது தான் சரியான தீர்வா?
யூரினரி இன்பெஃக்ஷன் அல்லது சிறுநீரகத்தில் கல் ஆகிய பிரச்சினைகள் இருந்தால் தண்ணீர் அருந்தலாம். சிறுநீரகம் பழுதாகியிருந்தால் தண்ணீர் அருந்துவது மேலும் சிக்கலை தோற்றுவித்துவிடும்.
அதனால் பிரச்சினையைப் பொறுத்தே தண்ணீர் அருந்துவது தீர்வாகும். இதனை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே தொடரவும். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் சீரான இடைவெளியில் அருந்த வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரைகளையோ அல்லது வலி நிவா ரணத்திற்கான ஊசிகளையோ தொடர்ச்சியாக உபயோகப்படுத்துபவர் களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படுவது உண்மை என்று கண்டறியப்பட்டு உள்ளது.
அதே தருணத்தில் வலி நிவாரணத்திற்காக எப்போதாவது மாத்திரை களை சாப்பிடுவதால் இது பாதிக்கப்படுவதில்லை.
No comments:
Post a Comment