இந்த கடவுள் இருக்காரே அவர் ரொம்ப ரொம்ப நல்லவர் ஏனென்றால் நம்மை எல்லாம் இந்த உலகத்தில் படைத்துவிட்டு சிவனே என்று உட்கார்ந்து விட்டார். நாம் எங்கே போனாலும் அவர் கேட்பதில்லை....என்ன செய்தாலும் அவர் கேட்பதில்லை ஆபீசில் நாம் வேலை பார்த்தாலும் அவர் ஏன்டா பார்த்தே என்று கேட்பதில்லை .... வேலை பார்க்காவிட்டாலும் மூச்சு விடமாட்டார். கடவுள் நினைத்தால் நம்மை என்னவெல்லாமோ பண்ணலாம் .... நாம் தானே இவனை / இவளை படைத்தோம் .... நாம் ஏன் இவனை / இவளை நம் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளகூடாது என்று ஒரு போதும் அவர் நினைத்ததில்லை....நினைக்கவும் மாட்டார் ....ஆஹா எவ்வளவு நல்லவர் அவர்... அதனால்தான் அவர் கடவுள் ஆகிவிட்டாரோ...
அதற்கு மாறாக நம்மை சுற்றி உலாவும் மனிதர்கள் அதே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா ? இவனை எப்படியாவது நம்ம கண்ட்ரோலில் கொண்டு வந்து விடவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் உதாரணத்துக்கு இதோ சில :
நண்பர்கள்: நம்மிடம் ஏதாவது உதவின்னு வருவான் ..... நம்ம போறாத காலம் நம்மால அவன் கேட்ட உதவியை அப்போ பண்ணமுடியாமல் போகலாம் .... அவ்வளவுதான் அவன் ஒரு வாரம் நம்மிடம் பேசமாட்டான் ..... ஏன் என்றால் நாம் அவன் கண்ட்ரோலில் இருந்து அவன் கேட்ட உதவியை உடனே பண்ணவேண்டும் என்று அவனுக்கு எதிர்பார்ப்பு ...
ஊரில் இருக்கும் மாமா : எப்போதாவது போன் பண்ணுவார் .....என்ன சௌக்கியமா என்று கேட்பார்.... என்ன நீ போனே பண்றதே இல்லை... என்றும் கேட்பார் .... நான் சும்மவாட்டியும் ஆமாம் மாமா நான் இப்போதான் உங்களை நினைத்தேன் அதற்குள் நீங்களே பண்ணிவிட்டீர்கள் என்று சொல்லுவேன் ( வேறே என்னதான் சொல்றது ) எல்லோரிடமும் பேசிவிட்டு அப்போ அப்போ போன் பண்ணு என்று சொல்லி வைத்துவிடுவார்... இவர் கதை என்னவென்றால்.... இவருக்கு இரண்டு பையன்கள் .... நன்றாக படிக்கவைத்தார்...நல்ல இடத்தில் நன்றாக படித்த பெண்களை கல்யாணம் பண்ணிவைத்தார்... அதோடு சும்மா இருக்கவேண்டியதுதானே. அதுதான் இல்லை .... மாமாவும் மாமியும் அந்த இரண்டு மருமகளையும் இவர்கள் புடவையையும் வேட்டியையும் தினமும் துவைக்கவேண்டும் என்று சொன்னார் ...... அந்த பச்சை புள்ளைகள் ( மருமகளைத்தான் சொல்லுகிறேன் ) துண்டை காணோம் துணியை காணோம் என்று முதல் வேலையாக இந்த பசங்களை இழுத்துக்கொண்டு தனியாக வீடு செட்ட்டப் பண்ணிவிட்டார்கள்... இந்த மாமாவுக்கு அந்த மருமகள்களை தன் கண்ட்ரோலில் கொண்டுவரவேண்டும் என்று எதிர்பார்ப்பு...
அடுத்த வீட்டுகாரர் : இவர் கதையே வேறு.... நம்ம வீட்டில் என்ன வாங்கினாலும் அவர் முதலில் அதை அவர் பார்த்துவிடவேண்டும் ... உதாரணம் டெய்லி நியூஸ் பேப்பர் .... பேப்பர் காரன் காலையில் பேப்பரை வாசலிலிருந்தே நம்ம வீட்டுக்கு குறி வைத்து ராக்கெட் விடுவான் ..... அதன் போதாத காலம் அது அவர் வீட்டு வாசலில் போய் விழும் .... இதுதான் சாக்கு என்று அந்த பேப்பரை உடனே எடுத்துக்கொண்டு உள்ளே போய் கதவை சாத்திக் கொள்ளுவார்... நமக்கு நம் வீட்டில் எப்போது பேப்பர் வரும் என்று கூட தெரியாது ..... அது வந்தாலும் கதவுக்கு உள் பக்கம் சிவனே என்று கிடக்கும்... நான் ஆபீஸ் போவதற்கு முன்பாக ஒரு ஐந்து நிமிஷம் நோட்டம் விட்டுவிட்டு கிளம்புவேன் ... ஆனால் இந்த வீட்டு மனுஷன் இருக்காரே. பேப்பர் கீழே விழவேண்டியதுதான் ... (நம்ம வீட்டில் தான் ) அவர் அதை லபக் என்று எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குள்ளே போய் விடுவார் என்று என் பையன் அடிக்கடி சொல்லுவான்... அதேபோல் அவர்கள் வீட்டு தண்ணி, மீந்துபோன சாம்பார் / ரசம் / பொரியல் எல்லாம் முதலிரவில்( முதலிரவு என்றதும் தப்பாக பார்க்கிறீர்களே... சமையல் செய்யப்பட்ட பொருள் மீந்து போனால் சமையல் செய்யப்பட்ட நாளின் இரவு முதல் இரவுதானே) நம்ம வீட்டில்தான் குடி இருக்கும்.... எங்கே என்று கேட்கிறீர்களா.... நம்ம வீட்டு பிரிட்ஜ்லதான். இதுல அவரும் அவர் சம்சாரமும் வெளியில் பேசிக்கொள்வது என்னவென்றால் அவர்களுக்கு எப்போதுமே ஜில் தண்ணிதான் வேணுமாம் .... அதேபோல ... ஒரு சாப்பாட்டு பொருளைக் கூட வீணாக அடிக்க மாட்டார்களாம் ... ஆமாம் .... ஆமாம் என்னை போல ஒரு இளிச்சவாயன் கிடைத்தால் ... இவர்கள் இன்னும் என்னவெல்லாமோ பேசமாட்டார்களா... இவர்களுக்கு எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை எப்போதுமே அவர்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாபெரும் எதிர்பார்ப்பு ...
ரொம்ப போரடித்துவிட்டேனா .......இன்னும் நிறைய இருக்கு....ஆனால் நீங்கள் சொல்லலாம் என்றால் .... அதை அடுத்த வாரம் சொல்லுகிறேன் ...உங்களுடைய அன்பான பர்மிஷனுடன்.
வெங்கட்
|
|
No comments:
Post a Comment