பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித் துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது.
கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள் ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன.
குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப் படுகிறது.
அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை.
உடலில் நன்மை செய்யக்கூடிய கொலஸ்ட்ரால் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
எனவே உணவில் பூண்டினை அவசியம் சேர்த்துக் கொள்வோம்..
No comments:
Post a Comment