Friday, March 23, 2012

மறைவாக உள்ள பொருட்களையும் படம் எடுக்கக்கூ​டிய அதிநவீன கமெரா கண்டுபிடிப்​பு




தற்போது உள்ள கமெராக்கள் மூலம் நேரடியாக காணப்படும் உருவங்கள் அல்லது பொருட்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும்.
மறைவாக உள்ள பொருட்களை எடுக்க முடியாது. காரணம் அப்பொருட்களில் இருந்து பட்டுத்தெறிக்கும் ஔிக்கதிர்கள் கமெராவை வந்து அடைவதில்லை. இதனால் பொருள் கமெராவிற்கு புலப்படாது.
எனினும் தற்போது இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக MIT ஆராய்ச்சியாளர்களால் அதி நவீன கமெரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஔிக்கதிர்களை அனுப்பிபொருட்களை இனம்காணக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கமெராவிலிருந்து பிறப்பிக்கப்படும் ஔிக்கதிர்கள் பொருளிற்கு இடையில் காணப்படும் வேறொரு மேற்பரப்பில் பட்டுத்தெறிப்படைவதன் மூலம் பொருளை சென்றடையும்.
பின் அக்திரானது மீண்டும் குறித்த மேற்பரப்பை வந்தடைந்து கமெராவை நோக்கி தெறிப்படைகின்றது. இதனால் மறைந்துள்ள பொருட்களையும் இனங்கண்டு புகைப்படம் எடுக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.

No comments:

Post a Comment