தொடர் என்றுதான் சொல்கிறார்கள், அது இடர் என அறியாமல். ஒளியால் இருள் பரப்பப்படுகிறது.
எல்லோருக்கும் போதுமான கவலைகள் இருக்கையில் தம் கவலைகளை அவை கூடுதலாகக் கொட்டுகின்றன.
காற்றும் உணவும் அவசியம். கவலையுமா? கவலை நம் இரண்டாவது ஆடையோ?
ஒன்பது சுவைகளும் டின்னில் அடைத்த தயாரிப்புகளாய்......நம் சிரிப்பில் கடவுளைக் காண்கிறார்கள்
இரசாயனத்தால் ஏற்படுத்தப்படும் சிரிப்புகள் உடலுக்கு நல்லவையா? அழும்போதுதான் பெண்கள் அழகாயிருக்கிறார்களா? முதுகுகள் பின்புறம் இருப்பது பிறர் குற்றம் பேசவேண்டும் என்பதற்காகவா?
இந்தப் பெட்டியில் எல்லாவற்றுக்கும் நியாயங்கள் சொல்லப்படுகின்றன எங்கள் நீதிமன்றங்கள்போல இவை மெல்லவே நகர்கின்றன
தொடர்கள் முடிந்து தூங்கும்போது நாம் ஒருநாள் இழந்தது அறியப்படவில்லை.
- நீலமணி-
|
No comments:
Post a Comment