வெள்ளை நிறத்தில் இருக்கும் காய், கனிகளை தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.
காலிஃபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காளான்கள்: பூஞ்சை இனத்தை காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. இது உண்பதற்கு ஏற்ற உணவு. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன
உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும்.
காளான்களில் அதிக புரதம் காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன, பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர்.
இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
உருளைக்கிழங்கு, வாழைப்பழம்: உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.
வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.
காலிஃப்ளவர்: காலிஃப்ளவர் வைட்டமின் சத்து நிறைந்தது. இதில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன.
டர்னிப்: பீட்ரூட், காரட் போல டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. இதை பச்சையாக சாலட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
|
No comments:
Post a Comment