சந்தன மலரிதழ் சிந்திய தேன்தனில்
செண்பகம் குளித்து வந்தாள்
சாமரம் வீசிய பூமரம் பேசிய
சங்கதி விழியில் சொன்னாள்
குங்கும நுதல்தனில் சங்கமம் ஆகிட
குறுநகை பூத்து நின்றாள்
கொடியினை எடுத்தொரு இடையென கொண்டவள்
குளிர்தரும் நிலவை வென்றாள்
திங்களும் தென்றலும் திருடிய மனதினை
தேவதை திருடிச் சென்றாள்
தீண்டலில் உயிர் வரை சீண்டிடும் காற்றென
தேகியை வருடிச் சென்றாள்
மன்மதன் அம்பினை புருவமாய் கொண்டவள்
மனதினை துளைத்து விட்டாள்
மலரணை மீதினில் புதுக்கவி புனைந்திட
மாதெனை அழைத்து விட்டாள்
இருபதை தாண்டிய இளமையின் தவமதை
இளையவள் களைத்து விட்டாள்
அறுபதை தாண்டினும் அடங்கிட மறுத்திடும்
ஆசையை விதைத்து விட்டாள்
திருமணம் எனுமொரு மருத்துவம் மாத்திரம்
தீர்த்திடும் நோயை தந்தாள்
கருமங்கள் யாவுமே முடிவதற்குள்ளே
கண்களை விட்டுச் சென்றாள்
நன்றியுடன்
செல்வராஜ்
No comments:
Post a Comment