என் கடைசி நிமிடத்தில்
வாழ்க்கையின்
வரவு செலவு பார்த்தேன்......
சிரித்த நாட்கள்
வரவு எழுதப் பட்டிருந்தது
அப்படி என்றால்
செலவு என் துக்கங்களா ? என
ஆர்வமுடன் பார்த்தேன்
அதுவும் சிரிப்புதான்
அப்படி என்றால் என் சந்தோசம் பொய்யானதா ?
என்னிடம் ஒன்றுமே இல்லையா இப்போது ?
ஆம்
என் சிரிப்பு எல்லாம் இழிந்தவர்கள் என்று
எள்ளி மற்றவரை பார்த்து நகையாடியதால்.......
என்னைப் பெரிதென்று எண்ணி சிரித்ததால்
இதோ
என் இறுதி ஊர்வலத்தில் ஒருவருமில்லை
No comments:
Post a Comment