நான் ஓவியங்களை விடவும் தூரிகையை ரசிக்கின்றேன்; ஏனென்றால்? அவை ஓவியத்தின்முகவரியில் தன்னைத் தொலைத்துவிடுவதால் நான் மலர்களை விடவும் காம்புகளை ரசிக்கின்றேன்; ஏனென்றால்? அவை மலர்களைமுன்நிறுத்தி தன்னை மறைத்துக் கொள்வதால் நான் வெற்றிகளைக் காட்டிலும் தோல்விகளை ரசிக்கின்றேன்; ஏனென்றால்? அவற்றில் முற்றிவிடும் தலைக்கனம்ஏதுமில்லை என்பதால். நான் இளமையை விடவும் முதுமையை ரசிக்கின்றேன்; ஏனென்றால்? அதனிடம் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால் பற்றுக்கள் அறும்வேளை பாரங்கள் குறைகிறது பாரங்கள் விடும்வேளை பறப்பது சுகமாகிறது - த. செந்தில் குமார்- Dr .தமிழ்- |
No comments:
Post a Comment