Thursday, January 12, 2012

சுருங்கிய தமிழ்த் தாய் வாழ்த்து



 
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

 
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

 
தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்து தான் 
தென்னிந்திய மொழிகள் வந்தது என்ற சொற்றொடரையும், ஆரிய மொழி அழிந்தது 
என்பதையும் திட்டமிட்டு, தமிழ் வரலாறு தமிழ்த்தாய் வாழ்த்திலும் 
இல்லாமல் பார்த்துக் கொண்டனர் தமிழக ஆட்சியாளர்கள்.

அன்புடன் 
Engr. சுல்தான்

No comments:

Post a Comment