Thursday, December 29, 2011

இளமை குன்றாத இந்தியத் தேசிய கீதத்திற்கு வயது நூறு

ஜன..கன..மன என்று இந்திய தேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம் ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது. 

நூற்றாண்டு கண்ட தேசிய கீதம் ,இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்திய தேசிய கீதமாக, நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம் , ஓங்கி ஒலிக்கப்பட்டுவிட்டது. முதன்முதலாக கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போதே ஜன.கன .மன ஹதி. நாயக. ஜேயஹே... என துவங்கும் தேசிய கீதம் பாடப்பட்டது. 

மொழி, இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் அதனை இப்பாடல் வலியுறுத்துகிறது. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடை‌‌யாளம் காண , நாட்டில் எந்த அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நாட்டு தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் எப்போதும் ஒலிக்கும் ‌மந்திரம் ஆகும். அது போல் இந்தியர்களாகிய நாம் நமது தேசப்பற்றை ‌காண்பிக்க ஜன..கன.மன தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

 நன்றி: தினமலர் 
நீலாம்பரி

No comments:

Post a Comment