Tuesday, December 27, 2011

மேடம் நா ஒரு வருஷமா ட்ரை பண்றேன்..



லைன் கெடைச்ச சந்தோஷத்துல எனக்கு பேச்சே வரல...

ஏன்பா பத்து வருஷத்துக்கு முன்னால ஒரே ஒரு பெப்சி உமா வாரத்துல ஒரே ஒரு நாளு நேயர்களோட ஃபோன்ல பேசி மகிழ்விச்சாங்க... அப்ப இந்த effect ல்லாம் குடுத்தது  வாஸ்தவம். இப்பதான் இத 24 மணி நேர சேவையாவே ஒரு 20 சேனல் பண்ணிகிட்டு இருக்காங்களே. இன்னும் அதே effect ah மாத்தாம குடுத்துக்கிட்டு இருக்கீங்களே இது நியாயமா? சில பேரு டெய்லி போன் பண்ணி "ஹை லைன் கெடச்சிருச்சி"ன்னு டெய்லி ஷாக் ஆவுறாய்ங்க. இப்பலாம் லைன் கெடைக்கலன்னாதாண்டா நீங்க ஷாக் ஆவனும்

காலங்காத்தால 7 மணிக்கு அலாரம் வச்சி எழுந்து ஆரம்பிக்கிற இவிங்க அலும்பு நைட் 9  மணிக்கு தான்பா முடியுது. "காலை தென்றல்"   "வாழ்த்தலம் வாங்க"    "வடை திங்கலாம் வாங்க"   "நாங்களும் நீங்களும்"   "நீங்களும் பக்கத்து வீட்டு காரரும்"   "குழந்தைகளுக்காக"  "மகளிர்க்காக "   "அக்காவுக்காக" "ஆயாவுக்காக"   "ஹலோ ஹலோ"    "ட்ரிங் ட்ரிங்"   "டொய்ங் டொய்ங்"  ன்னு ப்ரொக்ராமோட பேரும் ஆளும் தான மாறுறாய்ங்ளே தவற போட்ட மொக்கையே தான் 24 மணி நேரமும் போடுறாய்ங்க.

இந்த ப்ரோக்ராம்கள host பண்ற ஆளூகள பாக்கனுமே.. சென்னையிலயே
பொறந்து வளர்ந்து தமிழ் பேச தெரியாது போல பேசி உயிரெடுக்கும் ஒரு சுமார் ஃபிகர்க்கு அரை இன்ச்கு மேக்கப்ப போட்டுவிட்டு நிக்கவச்சிருவாய்ங்க. அதுக்கு pair ah ஒருத்தன போடுவாய்ங்க பாரூங்க...அவரு தலை சீவாம ஒரு கட்டம் போட்ட சட்டைய போட்டுகிட்டு ஒரு தூங்கி எந்திரிச்சி effect la இருப்பான். கேசுவலா இருக்காராமா...

காலைங்காத்தால 7 மணி ஆனா வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிருவாய்ங்க. எது எதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லலாம்னு இவைங்கள பாத்து தான் கத்துக்கனும். திடீர்னு ஒருத்தன் போன் பண்ணீ "நாளைக்கு தனது இருபத்து அஞ்சாவது நினைவு தினத்தை கொண்டாடும் எங்கள் கொள்ளூ தாத்தா பிச்சாண்டிக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்" ன்னு சொன்னா கூட "கால் பண்ணியதற்கு மிக்க நன்றி.. நாளை இருபத்தைஞ்சாவது நினைவு தினத்தை கொண்டாடும் உங்கள் கொள்ளூ தாத்தா பிச்சாண்டிக்கு எங்களின் சார்பாகவும் எங்கள் ..பீம்..டிவியின் சார்பாகவும்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. இதோ உங்களுக்கான பாடல் பாத்து எஞ்சாய் பண்ணுங்கம்பாய்ங்க. "அட்ரா அட்ரா நாக்கு மூக்க நாக்கு மூக்க"

கரெக்டா மணி 10 ஆயிருச்சின்னா உடனே மகளிர கவர் பண்ண ஆரம்பிச்சிருவாயிங்க ஏன்னா அந்த டைம்ல அவங்க மட்டும் தான் வீட்டுல இருப்பாங்க.ஆனா அவங்களூக்கு ஒரு கண்டிஷன். அவங்க போன் பண்ணா எதாவது டிப்ஸ் குடுக்கனும். டிப்ஸ் குடுத்தா தான் பாட்டு போடுவாங்க. இல்லன்னா song தான் போடுவாங்க அவங்க டிப்ஸ்குடுப்பாங்க பாருங்க... "நைட்டு அரைச்ச தோசை மாவ ஃப்ரிட்ஜ்ல வச்சிருந்தா அது கெட்டுபோகம அப்புடியே இருக்கும்... காலைல நாம தோசை செஞ்சி சாப்புடலாம்" னு ஒரு அம்மா ஒரு உலக மகா டிப்ஸகொடுப்பாங்க. அதுக்கு இதுங்க  "wow... இவளசூப்பரான டிப்ஸ் குடுத்த உங்களுக்காக ஒரு சூப்பர் பாடல் பாத்து எஞ்சய் பண்ணூங்க"

இந்த ப்யூட்டி டிப்ஸ் தான் இதுல எல்லாம் லைஹைட்.. "டெயிலி கடல மாவ மூஞ்சிலதடவி அரைமணி நேரம் வச்சிருந்து கழுவனும்.. இப்புடியே ஒரு மாசம் பண்ணா...."  இப்புடியே ஒரு மாசம் பண்ணா வீட்டுல உள்ள கடலை மாவுதான்டா காலி ஆகும். கருமம் புடிச்சவிங்களா...வேற ஒண்ணும் ஆவாது. எவன் கேக்க போறான்னு வாயில வர்றத அடிச்சி விடுறது

திடீர்னு பாத்தா ஒரு பாட்டி போன் பண்ணுது... இவியிங்க அதுகிட்ட இன்னிக்கு என்ன கொழம்பு வச்சீங்க ஆண்டின்னு கேக்குறாய்ங்க" அதுக்கு அவங்க  "சாம்பார் கண்ணு" ங்குது..உடனே இவியிங்க "போங்க ஆண்டி முந்தாநாளூ கூட இதே கொழம்பு தானே வச்சீங்கங்குறான். ஆக அந்த பாட்டி டெய்லி ஃபோன் பண்ணி என்ன சமைக்கிறோம்ங்கற வரைக்கும் இவிங்களுக்கு update குடுத்துகிட்டு இருக்கு. அப்புறம் ஏண்டா தமிழ்நாட்டுல இத்தனை நெட்வொர்க் வராது.

அப்புறம் சாயங்காலம் ஒரு 5 மணி ஆயிருச்சின்னா "அடிக்கடி கடி கடி" ன்னு அங்கங்க புடிச்சி கடிச்சி வச்சிருவானுக. வெறி நாய் கடிய கூட தாங்கிகலாம் போல.. கடி ஜோக் சொல்றோம்ங்கற பேர்ல இவனுங்க கடிய தாங்க முடியல... கடி ஜோக்கு உண்டான  மரியாதை போச்சேடா உங்களால.. (படிக்காதவன் விவேக் Slang)..

கடைசியா நைட்டு வருவாய்ங்க... காதலர்களுக்காக... அதுலயும் ஸ்பெஷலா ஒரு question ஒன்னு டெய்லி ரெடி பண்ணிகிட்டு வருவாய்ங்க. இந்த ப்ரோக்ராமுக்கு அதிகமா வர்றவிங்க யாருன்னு பாத்தா "ரெண்டு நாள் முன்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சவிங்க..போன வாரத்துலருந்து லவ் பண்ண ஆரம்பிச்சவியிங்கலாதான்  இருக்கும். மிஞ்சி மிஞ்சி போன போன மாசமா இருக்கும்.ஒரு ஆர்வ கோளாரு. எப்பயாச்சும் ஒருத்தரு ரெண்டு பேரு ஒரு நாலு வருஷமா லவ் பண்றேன்.. ஒரு ஆறு வருஷமா ல்வ் பண்றேன்ன்னு சொல்லுவாங்க... அதுக்கு நம்மாளுக "wow.. superb..உங்க ஆளு  என்ன பண்றாங்க?" ம்பாங்க. அதுக்கு "நான் என்னோட wife ah தான் லவ் பண்றேன்... கல்யாணம் ஆயி நாலு வருஷம் ஆச்சி". நாயி வேற யாரயாச்சும் பாத்துச் சின்னா ராத்திரி வீட்டுல செருப்படி நாலு விழுகும். அதுக இப்புடி ஃபோன் பண்ணி மனச தேத்திக்கிறாங்க... ஒரே குஸ்டமப்பா...

ஆமா இதெல்லாம் நா என் உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்.. வேற என்ன
பண்றது நா பொலம்புறதல்லாம் கேக்க உங்கள விட்டா வேற யாரு இருக்கா...
நா உங்க தம்பி மாதிரி...அவ்வ்...அவ்வ்....



கரு. விக்னேஷ் ஜானகிராமன் 

No comments:

Post a Comment