Friday, December 30, 2011

கைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்




உலகில் அதிகமானோர் உபயோகப்படுத்தும் கைபேசிகள் ஜி.எஸ்.எம்(Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80 சதவீதம் இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
இந்நிலையில் ஜேர்மனியா நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன் தலைவரான கார்ஸ்டன் நோஹல் ஜி.எஸ்.எம் கைபேசிகளில் காணப்படும் பாதுகாப்புப் குறைபாடு தொடர்பில் ஆய்வறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன் படி ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கைபேசிகளில் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும், இதன் மூலம் எமது கைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன், குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதாவது நமது கைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும்.
இப்பாதுகாப்புக் குறைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது.
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை கைபேசி உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது.

No comments:

Post a Comment