மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மத்திற்கு இரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் இரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது.
பின்னர் பரிசோதித்த போது அந்த எலிகள் அனைத்தும் குணமடைந்து இருப்பது தெரியவந்தது. இரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment