Thursday, October 6, 2011

பாரிசவாதத்திலிருந்து நோயாளிகளை காக்கும் மூளை அலைகள்




மூளை அலைகளை மட்டுமே பயன்படுத்தி ஒரு கணினியில் ஒரு கையைக் கட்டுப்படுத்தும் பரீட்சார்த்த திட்டத்திற்குக் குரங்குகள் பயிற்சியளிக்கப்படுகின்றன.
வெவ்வேறு பொருட்களின் அமைப்புகளை உணரத் தமது கைகளை மிருகங்கள் பயன்படுத்தக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நுட்பம் உடற்பாகங்கள் இயலாத நிலையிலுள்ள நோயாளிகளால் அவர்களது நகர்வுகளை மீண்டும் செயற்பாட்டிற்குக் கொண்டுவர முடிவது மட்டுமல்லாது தொடுகை உணர்வையும் மீளப்பெறக் கூடியவாறுள்ளது.
பரிசோதனைகளில்  திரையில் உள்ள ஒரு கையைக் கட்டுப்படுத்த அவற்றின் மூளைகளில் மின்னலைகளை உருவாக்குவதன் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.
இதனால் அந்தக் குரங்குகள் திரைகளில் காணப்பட்ட வெவ்வேறுபட்ட அமைப்புகளை உணரக்கூடியதாயிருந்தன. வட கரோலினாவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தான் இந்த ஆய்விற்குத் தலைமைதாங்கினார்.
இவர்கள் ஒரு கணினி விளையாட்டின் மூலம் joystick இனைப் பயன்படுத்தி ஒரு கையை நகர்த்தப் பயன்படுத்தினர். இது மோசமான நரம்பியல் தாக்கத்தினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் மீட்பிற்குப் பயன்படும் என இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குரங்குகளின் மூளையில் பலதரப்பட்ட மின்னலைகள் செலுத்தப்பட்டுப் பின்னர் அவற்றைக் கணினித் திரையுடன் தொடுத்தனர்.
பின்னர் joystick உம் அகற்றப்பட்டது. இதனால் குரங்கின் மூளையினால் இந்தக் கை நகர்த்தப்பட்டது. இதனால் கிடைத்த சமிக்கைகள் அந்தக் கையினை நகர்த்தின.
இதனால் கம்பிகளற்று குரங்குகளால் கட்டுப்படுத்த முடியும் என்ற முறை தற்போது மேம்படுத்தப்பட்டுவருகின்றது எனப் பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீண்டும் நடக்கும் திட்டத்தினை டியூக் பல்கலைக்கழக அணி மேற்கொண்டுவருகின்றது.
இதனை பிரேசிலில் எதிர்வரும் 2014 இடம்பெறப்போகும் உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் விளக்கப்போவதாக இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment