அலர்ஜி என்றால் ஒவ்வாமை என்று பொருள். அலர்ஜி என்ற பெயரை முதலில் வைத்தவர் டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்கியூட். அலர்ஜி என்பது மைக்ரோப், பக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக இம்யூன் சிஸ்டம் என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சரியாகக் கவனிக்காமல் இது தவறாக செயல்பட்டு விடுகிறது. அதனால் தான் கத்திரிக்காய் கூட சிலருக்கு அலர்ஜியாகத் தெரிகிறது. எதனால் இந்த அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். ஏனென்றால் ஒரு நாளில் நாம் எத்தனையோ வாசங்களை நுகர்கிறோம். எத்தனையோ பொருட்களை சாப்பிடுகிறோம். அவற்றில் அலர்ஜிக்கு காரணமான பொருள் எது என்று கண்டுபிடித்தால் தான் அவற்றை நாம் ஒதுக்கிவிட்டு அலர்ஜியில் இருந்து விடுபட முடியும். உதாரணமாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அலர்ஜி தான் 40 சதவீதம் காரணமாக உள்ளது. “அனாபைலாக்டிக் ஷாக்” என்று ஒரு நோய் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் உள்ள திசுக்கள் எல்லாம் வீங்கி விடும். அதைத் தொடர்ந்து வயிற்றுத் தசைகளில் துடிக்கும் படியான வலியும் உண்டாகும். தொண்டைக் குழாய் வீங்கி நெருக்க ஆரம்பிக்கும். மூச்சுத் திணறல், பிளட் பிரஷர் என்று ஒவ்வொன்றாக தாக்க ஆரம்பித்து விடும். அதனால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான அலர்ஜிக்கு சில வகை மீன்கள், பூச்சிக்கடி, பெனிசிலின் போன்றவை தான் காரணம். தோல் பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் சில நோய்களில் இருந்து அலர்ஜிக்கான காரணத்தைக் கண்டறிகின்றனர். இந்த சோதனையில் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருளை சிறு ஊசியின் மூலம் உடலில் செலுத்துகின்றனர். அப்போது உடல் ஏதாவது ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறதா என்று பார்க்கின்றனர். தற்போது உலகம் முழுவதும் அலர்ஜியைப் பற்றிய ஆராய்ச்சிகளும், அதற்கான எதிர்ப்பு மருந்துகளும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹின்ச் கிளிப் என்பவர் நுகர்வதால் உண்டாகும் அலர்ஜியைத் தடுக்க ஒரு பிளாஸ்டிக்கால் ஆன கருவியைக் கண்டறிந்துள்ளார். இதனுள் ஒரு சிறிய மின்விசிறி சுழன்று கொண்டிருக்கும். இந்த சாதனத்தைத் தலையில் கவிழ்த்துக் கொண்டால் பில்டர் செய்யப்பட்ட சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். அலர்ஜியைத் தூண்டி விடுவது எது என்று தெரியுமா? உடலுக்குள் இருக்கும் ஆர்க்கிடோனிக் என்ற அமிலம் தான் என்றும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். |
No comments:
Post a Comment