Sunday, October 2, 2011
உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் தூக்கமின்மை
மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் நித்திரை மிக முக்கிய இடத்தை பெறுகிறது.
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு நித்திரை கொண்டு ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் மனிதனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.
நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத் தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது.
எனவே ஒவ்வொருவருக்கும் நித்திரை கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்து விடலாம். ஆனால் நித்திரை கொள்ளாது விழித்திருக்க முடியாது.
ஒருவேளை நம்மால் நித்திரை கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால் மனித இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும்.
இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்சினை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.
நித்திரை கொள்ளாது இருப்பதனால் இரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு கூடுது.
ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment