Wednesday, September 7, 2011

புற்றுநோய் எதிர்ப்பு வைரசை கண்டுபிடித்து ஆய்வாளர்கள் சாதனை




இரத்தத்திற்குள் செலுத்தப்படும் வைரஸ் ஒன்று உடலுக்குள் நேரடியாகப் புற்றுநோய்க் கலங்களை நோக்கிச் செலுத்த முடியும் என ஆய்வாளர்கள் முதன்முறையாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரஸினை 23 நோயாளர்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வைரஸ் நலமான திசுக்களைத் தவிர்த்துத் தேவையற்ற கலங்களை மட்டுமே தாக்கியது.
இவை உண்மையிலேயே நம்பிக்கையைத் தந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் எமக்கு உதவக்கூடும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
வைரசினைப் பயன்படுத்துவது புதியதொரு முறையல்ல எனினும், இவற்றை நேரடியாக எதிர்ப்புசக்தித் தொகுதிக்குள் செலுத்த வேண்டியது தான் முக்கியமாக இருந்தது.
இதற்காக JX-594 என்ற சின்னம்மைத் தடுப்புமருந்திற்குப் பயன்படுத்தப்பட்ட வக்சினா வைரசினை மேம்படுத்தி அதனை 23 நோயாளிகளிற்குள் வெவ்வேறு அளவுகளில் செலுத்தினர்.
8 பேரில் உயரளவிலும் 7 பேரில் குறைந்தளவிலும் செலுத்தினர். ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் 6 நோயாளர்களிற்குச் சிறிது காலத்திற்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்வதை இது தடுத்தது.
இது முற்றுமுழுதாக நோயைத் தீர்க்கவில்லை எனினும் எதிர்காலத்தில் இதைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலைக்கு இது வழிவகுக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment