Wednesday, September 7, 2011

மனிதனின் மனதை புரிந்து கொள்ளும் கணணிகள்




மனித மூளையை ஸ்கேன் செய்து மனத்திலுள்ளதை அடையாளப்படுத்தும் கணணி செயற்பாடு முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குருதியோட்டத்தின் மாற்றத்தைக் கண்காணிக்கும் மூளை ஸ்கேனை செய்த போது மனித மூளை ஒத்த சொற்களைப் பற்றி யோசிப்பதைத் தூண்டியதைக் காட்டியது.
அத்துடன் ஒரே விடயங்களை எடுத்துக்காட்டாக கண் அல்லது கால் என்ற உடல் உறுப்புகள் தொடர்பான சொற்களை அடையாளங்காணவும் மூளை ஸ்கேன்களைப் பயன்படுத்தினர்.
இதிலிருந்து ஒருவரின் மனத்தில் தோன்றும் எந்தவொரு பொருளோ விடயமோ உணர்ச்சியோ மூளையின் பகுதிகளில் தெரியுமென்ற அடிப்படைக் கருத்தினை இது வெளிப்படுத்தியது.
இந்த மூளை வாசிப்புக் கருவிகள் முதலில் உணர்ச்சியற்றுக் காணப்படுபவர்களுக்கே உதவியாயிருக்கும் என்றார்.
அத்துடன் சாதாரணமானவர்கள் தமது கைகளைத் தட்டச்சுச் செய்யாமல் எடுக்கும் போது சில பிரச்சினைகளை இது உண்டுபண்ணலாம்.
எனினும் இத்தகைய தொழிநுட்பத்தினை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது என்கின்றனர் கண்டுபிடிப்பாளர்கள்.

No comments:

Post a Comment