Monday, August 29, 2011

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?


Join Only-for-tamil
அன்பு சகோதர்களே எனக்கு ஒரு தோழி 

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன ?
 என்று ஒரு பட்டியலைத் தொகுத்து அனுப்பினார்.
 
அதைப்போல் சகோதர்களே  நீங்களும்  உங்கள் மனைவியிடம்
 எதிர்பார்ப்பது என்ன என்று ஒரு பட்டியலைத் தொகுத்து 
பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். 
 
 
* 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

* 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

* 3. கோபப்படக்கூடாது.

* 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

* 5. பலர் முன் திட்டக்கூடாது.

* 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

* 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

* 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

* 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

* 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

* 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

* 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய 
         முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

* 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

* 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

* 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

* 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

* 17. ஒளிவு மறைவு கூடாது.

* 18. மனைவியை நம்ப வேண்டும்.

* 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

* 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

* 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக்

கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

* 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

* 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

* 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

* 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

* 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக்கூடாது.

* 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம்

         சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

* 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

* 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

* 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

* 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

* 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

* 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

* 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

* 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

* 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

அன்புடன் 
ஸ்ரீமரியா 

No comments:

Post a Comment